ஆசிமட அரசடி விநாயகர் ஆலயம்

அமைவிடம்
கோண்டாவில் கிழக்கு புகையிரதநிலைய வீதியில் அமைந்துள்ளது ஆசிமட அரசடி விநாயகர் ஆலயம்.


தற்கால நிகழ்வுகள்
தற்போது இவ்வாலயத்தில் ரமணிதரக்குருக்கள் பூசையாற்றி வருகிறார். இங்கு மூன்று வேளைப்பூசைகள் நடைபெறுகிறன. மற்றும் ஏகாதசிவிரதம், இலட்சார்ச்சனை, திருவெம்பாவை, பிள்ளையார்கதை, மாதவிரதங்கள், கஜமுகசங்காரம் போன்றன நடைபெறுகிறன.


மகோற்சவம்
மகோற்சவமானது ஆனி உத்தரத்தில் தேர்த்திருவிழா நடைபெறுமாறு, கொடியேற்றத்துடன் மமோற்சவம் ஆரம்பித்து பத்து தினங்கள் நடைபெறும்.
1ம் நாள் ... கொடியேற்றம்
2ம் நாள் ... மயில்வாகனம்
3ம் நாள் ... சிங்கவாகனம்
4ம் நாள் ... மூஷிகவாகனம்
5ம் நாள் ... ரிஷபவாகனம்
6ம் நாள் ... பூச்சப்பறம்
7ம் நாள் ... கைலாயவாகனம்
8ம் நாள் ... சப்பறத்திருவிழா
9ம் நாள் ... இரதோற்சவம்
10ம்நாள் ... தீர்த்தத்திருவிழா


மூர்த்திகள்
கர்ப்பக்கிருகத்தில் விநாயகரும், வசந்தமண்டபத்தில் இலக்குமி, கிருஷ்ணன், பிள்ளையார், முருகன் ஆகிய மூர்த்தங்கள் வீற்றிருக்கிறனர். எழுந்தருளி மூர்த்தியாக பஞ்சமுகவிநாயகர் காணப்படுகிறார். கர்ப்பக்கிருகத்துக்கு தெற்காக தெற்கு நோக்கி தெட்சணாமூர்த்தியும், தென்மேற்காக கிழக்கு நோக்கி விநாயரும், மேற்காக கிழக்கு நோக்கி இலக்குமியும் கிருஷ்ணபிரானும், வடமேற்காக கிழக்கு நோக்கி முருகப்பெருமானும், வடக்காக தெற்கு நோக்கி சண்டேஸ்வரரும், வசந்தமண்டபத்திற்கு முன்புறமாக சந்தானபாலகரும் வீற்றிருக்கிறனர்.

No comments:

Post a Comment