ஸ்ரீ சபரீச ஐயப்பன் தேவஸ்தானம்

அமைவிடம்
கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியில், கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் அமைந்து காணப்படுகிறது ஸ்ரீ சபரீச ஐயப்பன் தேவஸ்தானம்.


தற்கால நிகழ்வுகள்
இவ்வாலய குருசாமியே பூசையாற்றுபவராக காணப்படுகிறார். இவ்வாயத்தில் தினசரி மூன்று வேளைப் பூசைகள் நடைபெறுகிறன. மகரஜோதிப்பெருவிழாவானது வருட இறுதியில் 60 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அக் காலப்பகுதியிலேயே இவ்வாலய மகோற்சவமும் நடைபெறுகிறது. வேட்டைத்திருவிழா, இரதோற்சவம் நடைபெறுகிறது.



மூர்த்திகள்
இவ்வாலயக்கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியும், வசந்தமண்டபம் கிழக்கு நோக்கியும் காணப்படுகிறன. கர்ப்பக்கிருகத்திலும், வசந்தமண்டபத்திலும் ஐயப்பமூர்த்தி காணப்படுகிறார். மற்றும் கடுத்தசாமி, கறுப்பன்சாமி, கன்னிமூலகணபதி, மஞசமாதா அம்மன், ஆஞசநேயர், நாகபிரபு போன்ற மூர்தங்கள் காணப்படுகிறன.

No comments:

Post a Comment